தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர்களிள் ஒருவர் பாலா. இவரின் வித்தியாசமான கதை மற்றும் திரைக்கதைக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவர் முதன் முதலில் நடிகர் விக்ரமை வைத்து, சேது படத்தை இயக்கினார். இத்திரைப்படம் ஹிட் அடித்து நல்ல பெயறையும் பல விருதுகளை தட்டிச்சென்றது. தன் முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார் பாலா. இவருக்கு மட்டுமில்லாமல் நடிகர் விக்ரமுக்கும் இப்படம் மூலம் நல்ல வரவேற்பு பெற்றார்.
பின் நடிகர் சூரியாவை வைத்து நந்தா படத்தை இயக்கினார். இந்த படமும் நல்ல வரவேற்பு பெற்றது. பின் பிதாமகன், நான் கடவுள், பரதேசி, அவன் இவன் படங்களை இயக்கி பல வருதுகளை குவித்தார். ஆனால் நாச்சியார், தாரை தப்பட்டை போன்ற படங்கள் ரசிகர்களை பெரியளவில் கவரவில்லை. பிறகு, தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்று ரீமேக் செய்தார். இதில் நடிகர் விக்ரமின் மகன் த்துரூவ் விக்ரமை வைத்து இயக்கினார். இந்த படம் ஓ.டி.டி யில் வெளியானாலும் பெரிய வரவேற்பை பெறவில்லை.
இந்த சூழலில் பாலா தற்போது மீண்டும் நடிகர் சூரியாவை வைத்து இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர்கள் கூட்டணியில் இதற்க்கு முன்பு நந்தா, பிதாமகன் போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் கொடுத்த நிலையில் இந்த படமும் ஹிட் அடிக்கும் என்று ரசிகர்கள் எதிற்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுமட்டும் இல்லாமல், சமீபத்தில் ரிலீஸ் ஆன பாலாவின் திரைபடங்கள் வெற்றி அடையாத நிலையில் நல்ல கம்பாக் கொடுத்தே ஆகவேன்டும் என்ற முனைப்பில், இந்த கூட்டணி அமைந்தால் கண்டிப்பாக படம் ஹிட் ஆகும் என்றே எதிற்பார்க்களாம்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in