உலகின் மிக சிறந்த டி 20 தொடர் என்றால் அது ஐ.பி.எல் தொடர் தான். கடந்த 2020 ஐ.பி.எல் தொடர் துபாயில் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்டது. இதனால் கடந்த 2014 க்கு பிறகு தற்போது ஐ.பி.எல் தொடரின் மதிப்பு சரிந்துள்ளது என்று கூறப்படுகிறது. ஐ.பி.எல் லை திருவிழா போல் ரசித்து பார்த்து கொண்டிருந்த சமயத்தில் கொரோனா தோற்று பாதிப்பால் ஐ.பி.எல் தொடருக்கு இந்தியாவில் தடை விதிக்க செய்தது. பின்னர் ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடியாக காணப்படும் மைதானங்களை பார்க்கும்போது ரசிகர்களை மிகவும் சோகத்திற்குள்ளாகக்கியது.
தற்போது 2021 ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் நடைபெற போகிறது என்றாலும் ஆரம்பத்தில் சில போட்டிகளுக்கு ரசிகர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது என்று பல கட்டுப்பாடுகளுடனே நடக்க இருக்கிறது. ஐ.பி.எல் யில் அதிக ரசிகர்களை கொண்ட அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். தல தோனி இந்த அணியில் இருப்பதாலேயே இந்த அணிக்கு ஏராளமான ரசிகர்கள் உலகமெங்கும் உள்ளானர். மூண்டு முறை ஐ.பி.எல் தொடரை கைப்பற்றி இருக்கும் இந்த அணி கடந்த 2020 ஐ.பி.எல் தொடரில் சரியாக பெர்பார்ம் செய்யவில்லை.
இதனால் இந்த அணியின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதுவரை எல்லா வருடங்களும் தொடர்ந்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற சென்னை அணி கடந்த ஆண்டு மட்டும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் போனது ரசிகர்களை வருந்த செய்தது. இதற்கு முக்கிய காரணம் சென்னை அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் சரியில்லாமல் போனது என்றே கூறலாம். அதனை சரி செய்யும் விதமாக தற்போது பிப்ரவரி மாதத்தில் நடந்த ஏலத்தில் புதிதாக எடுக்கப்பட்ட ராபின் உத்தப்பாவை முதலில் களம் இறக்கப்போகிறார் தோனி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2020 போட்டிகளில் டுப்லெஸிஸ், ருத்ராஜ் , வாட்சன் மாறி மாறி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கினர். இதில் தற்போது வாட்சன் ஐ.பி.எல் தொடரை விட்டு வெளியேறிய நிலையில் ராபின் உத்தப்பா டுப்லெஸிஸுடன் இனைந்து முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in