ஐ.பி.எல் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. சென்ற வருடம் உலகமே கொரோனா நோயை எதிரித்து போராடி கொண்டிருந்தது. கொரோன பாதிப்பின் காரணமாக தாமதமாக தான் ஐ.பி.எல் 2020 நடைபெற்றது. இதை தொடர்ந்து இந்த ஆண்டின் ஐ.பி.எல் தொடர் ரசிகர்கள் யாருக்கும் அனுமதியில்லாமல் பல கட்டுப்பாடுகளுடன் நடந்து வருகிறது. ஒவ்வொரு அணிக்கும் ஒரு சில முக்கியமான பிலயேர்கள் என்று இருக்கிறார்கள்.
அவர்களின் பெரும் பங்கு தான் அணியை வெற்றி பாதைக்கே அழைத்து செல்லும். இந்நிலையில் கொரோனாவின் கோர தாண்டவத்தால் இன்று நடக்க இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையிலான போட்டி ஒத்திவைக்கபட்டுள்ளது. இதை தொடர்ந்து தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் chief executive officer காசி விஸ்வநாதன், bowling coach எல்.பாலாஜி , மற்றும் பஸ் கிளீனருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த சென்னை , மும்பை போட்டியில் பாலாஜி சென்னை அணி வீரர்களோடு டகௌட்டில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக சென்னை அணியின் அடுத்த போட்டி தள்ளிவைக்கபடும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in