ஐ பி எல் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில் இதற்கான ஏலம் இன்று நடைபெற்றது. இதில் பல மாற்றங்கள் பல அணைகளில் நடைபெற்றுள்ளது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்த வரை அது குறைவு தான். கடந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஐ பி எல் தொடர் இந்தியாவில் நடைபெறாமல் அரபு நாடுகளில் நடைபெற்று இருந்தது.
ஆனால் இந்த முறை இந்தியாவில் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இன்று சென்னை அணியின் மாற்றங்கள் குறி்த்து காண்போம். சி எஸ் கே அணி கடந்த ஆண்டு தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினாலும் மற்ற அணிகளுடன் ஒப்பிடும் போது தனக்கென்று ஒரு இடத்தை நிலைநாட்டி தான் உள்ளது. அணியில் சிலர் நீக்கப்பட்டு சிலர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
அதில் கேதர் ஜாதவ் நீக்கம் செய்துள்ளது சென்னை அணி. முதலில் எம் எஸ் தோனி கேப்டன் முறையில் 15 கோடி என்ற அளவில் எடுக்கப்பட்டார். பின்னர் ரெய்னா 11 கோடி என்றும் மூன்றாவது அதிக தொகையாக ஜடேஜா மற்றும் மொயின் அலி 7 கோடி மற்றும் பிராவோ 6.4 கோடி என்றும் நிர்ணயித்தனர். கிருஷ்ணப்ப கெளதம் 9.25 கோடி அடுத்தடுத்து வரும் வீர்கள் ஐந்து கோடியில் தொடங்கி 20 லட்சம் ரூபாய் வரை இறங்கு வரிசையில் எடுக்கப்பட்டு அணியை அமைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம்.
இதன் அடிபடையில் சாம் கரண் 5.5 கோடி என்றும் கரண் ஷர்மா என்ற வீரர் 5 கோடி அளவிலும், ஷார்டல் தாக்கூர் 2.6 கோடி என்றும் அம்பத்தி ராயுடு 2.2 கோடி அளவிலும் மற்றும் ஜோஷ் ஹாசில்வுட் என்ற வீரர் 2 கோடி என்ற மதிப்பிலும் எடுத்து இருக்கிறது. அதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி வீரர் டு பிளிசிஸ் 1.6 கோடி என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை தொடர்ந்து பவுலிங் பகுதியில் தீபக் சாகர் 80 லட்சத்திற்கும் இம்ரான் தாஹிர் 1 கோடி அளவிலும் மிட்செல் சான்டர் 50 லட்சம் அளவிலும் தேர்ந்தெடுத்து இருக்கிறது. மேலும் நாராயண் ஜகதீஷ் 20 லட்சம் மற்றும் கையிக்வாட் 20 லட்சம் என்றும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை அணி ரசிகர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட தயாராகி வருகின்றனர். எனென்றால் பல சிக்கலான வீரர்கள் வைத்து கடந்த ஆண்டு கப் எடுக்க முடியல என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனம் வந்தது. அதற்கெல்லாம் முற்று புள்ளி வைக்கும் விதமாக இந்த ஆண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஐ பி எல் தொடர் பற்றி இன்னும் பல எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in