குத் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவர்களாக வருபவர்கள் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட். இவர்கள் இருவரும் சமையல் கலையில் வல்லுநர்கள். செஃப் தாமு 2010ல் நடந்த சமையல் மாரத்தானில் கலந்து கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அதே போல செஃப் வெங்கடேஷ் பட் அவர்கள் Accord ஹோட்டலின் CEO ஆக உள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சமையல் சமையல் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் வெங்கடேஷ் பட், அந்த நிகழ்ச்சியின் போது தன்னை மிகவும் Strict ஆன நபராக காட்டிக் கொண்டார். ஒழுங்காக சமைக்கத் தெரியாத நபர்களை வறுத்து எடுத்து விடுவார். அப்படி இருந்த பட் 2019 முதல் ஒளிபரப்பாகி வரும் குத் வித் கோமாளி என்ற புது விதமான நிகழ்ச்சியில் தாமுவுடன் கலந்து கொண்டு நடுவராக பங்கேற்று வருகிறார். தற்போது குத் வித் கோமாளி சீசன் 3 நடைபெற்று வருகிறது.
இதில் புதிய கோமாளிகளாக குரேஷி, சூப்பர் சிங்கர் பரத், மூக்குத்தி முருகன், ப்ளாக் ஷீப் சேனலில் வரும் அதிர்ச்சி அருண் போன்றவர்கள் பங்கேற்றனர். இதில் பரத் நடுவர்களை மாமா என அழைத்தது பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது. அதற்கு மேலாக நடுவர் வெங்கடேஷ் பட் குரேஷி மற்றும் பரத்தை பெரிய கொம்பு கொண்டு அடித்தது இன்னும் பார்வையாளர்களை வெறுப்படைய வைத்தது. பரத் வலிக்கிறது என்று சொல்லியும் பட் விடாமல் அடித்தது தவறு என கடந்த இரண்டு நாட்களாக நெட்டிசன்கள் வெங்கடேஷ் பட்டை வறுத்து எடுத்து வருகின்றனர்.
இதற்கு தனது சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கமளித்துள்ள பட்,
“இது ஒரு டிவி ஷோ, இதை டிவி ஷோவாக மட்டும் பாருங்கள், அங்கு நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் உங்களை சிரிக்க வைப்பதற்காக மட்டுமே, அடிப்பது போன்ற தோற்றம் மட்டுமே காண்பிக்கப்படுகிறது, யாரையும் காயப்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை” என்று கூறியுள்ளார். இது பற்றி கூறிய பரத் அங்கு நடந்தவை அனைத்துமே சிரிப்புக்காக நடந்தவை, யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார்.
எனினும் சிரிப்பு வர வேண்டும் என்றால் அது ஒருவரை அடித்து துன்புறுத்தி வர வைக்கக் கூடாது என்பதே குக் வித் கோமாளி ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.. மாற்றிக் கொள்வாரா? வெங்கடேஷ் பட்? Watch the Video below
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in