இந்திய கிரிக்கெட் உலகில் அசைக்க முடியாத இடத்தில் உள்ளவர் தோனி. வெற்றி என்றாலும் தோல்வி என்றாலும் நிதானத்தை இழக்காமல் டென்ஷன் ஆகாமல் ஒரே மாதிரி நடந்து கொள்ளும் கேப்டன். அதனால் தான் அவருக்கு கூல் கேப்டன் என்று பெயர். தோனி இந்திய கிரிக்கெட் விளையாட்டில் ஒரு மைல் கல்லாய் இருந்தவர். ஒரு சராசரி டிக்கெட் கலெக்டர் ஆக இருந்து இந்திய அணியின் கேப்டனாக மாறி இந்திய அணியை உலக கிரிக்கெட் அரங்கில் நிலை நாட்டிய ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர்.
தமிழ் ரசிகர்கள் தல அஜித்திற்கு பிறகு செல்லமாக தல என்று கூப்பிடுவது தல தோனியை தான். இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எடுத்துக்காட்டாய் ஒரு கிரிக்கெட் லெஜென்டாக பல கோடி ரசிகர்களை வைத்திருப்பவர் தல தோனி. இந்திய அணிக்காக அனைத்து சர்வதேச கோப்பைகளை வாங்கி கொடுத்த பெருமை தல தோனிக்கு உண்டு. பல ஆண்டுகளுக்கு பிறகு 2011 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்து பெருமை சேர்த்தார் தல தோனி. இப்படியொரு நிலையில் கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் தன்னுடைய ஓய்வை அறிவித்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தினார். Youtube Video Code Embed Credits: Chennai Super Kings Youtube Channel
இருந்தாலும் ஐ.பி.எல்லில் சென்னை அணிக்காக தோனி ஆடுவது ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தது. இளம் வயதில் இவர் நீளமான முடி வைத்து இருப்பார். இவருடைய ஹெலிகாப்டர் ஷாட்டுகள் உலக அளவில் பிரபலம். நன்றாக இழுத்து பந்தை ஒரு அடி அடித்தால் பந்து பறந்து சென்று மைதானத்தை தாண்டி விழும். தற்போது அவர் அடிக்கும் சிக்ஸர்களின் தொகுப்பு வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது, அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video…
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in