தமிழ் சினிமாவில் கைவிடப்பட்ட படங்கள் என்று பார்த்தால் ஒரு பெரிய லிஸ்டே போடலாம். அந்தளவிற்கு ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து கைவிடப்பட்ட படங்கள் ஏராளம். அந்த வகையில் பெரிய நடிகர்களின் கைவிடப்பட்ட படங்கள் சிலதை பார்க்கலாம். கடந்த 2011 ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவர இருந்த திரைப்படம் ராணா. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருந்த இந்த திரைப்படம் ராஜியின் உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தால் கைவிடப்பட்டது.
இந்த வரிசையில் அடுத்ததாக ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிய திரைப்படம் தல அஜித் நடிப்பில் வெளி வர இருந்த காங்கேயன். இந்த படத்தையும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்க இருந்தார். இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரியளவில் எதிர்பார்ப்பை தூண்டினாலும், சில காரணங்களால் இந்த படத்தின் ஷூட்டிங் கைவிடப்பட்டது.
அடுத்தது தளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருந்த யோஹன் அத்தியாயம் ஒன்று. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் யோஹன் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் first look வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நிலையில் இந்த படமும் கைவிடப்பட்டது.
அடுத்ததாக சூர்யா நடிப்பில் வெளிவர இருந்த துப்பறியும் அனந்தன். இந்த படத்தையும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தான் இயக்க இருந்தார். 2012 ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பும் பாதியில் கைவிடப்பட்டது.
அடுத்ததாக 1997 ஆம் ஆண்டே படத்தின் வேலைகள் துவங்கப்பட்டு பின்னர் பட்ஜெட் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்ட திரைப்படம் மருதநாயகம். இந்த படத்தை தயாரித்து இயக்கி, நடிக்க இருந்தார் கமல்ஹாசன். இன்றும் இந்த படத்தை எதிர்ப்பார்க்கும் பல ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதே உண்மை.
அடுத்ததாக தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாக இருந்த திரைப்படம் சூதாடி. ஆடுகளம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தை கையில் எடுத்தார் வெற்றிமாறன். ஆனால் இந்த திரைப்படமும் கைவிடப்பட்டது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in