தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி இன்று ஹீரோவாகவும் , இயக்குனராகவும் அவதாரம் எடுத்து பல ரசிகர்களை கவர்ந்த கதாநாயகனாக இருக்கவர் ராகவா லாரன்ஸ். இவர் எடுத்த காஞ்சனா திரைப்படங்கள் மூலம் பேமிலி ஆடியன்ஸ் ஹீரோவாக மாறினார் லாரன்ஸ். இவர் இறுதியாக நடித்து இயக்கிய
திரைப்படம் காஞ்சனா 3. இந்த திரைப்படம் குழந்தைகளை அதிகமாக கவர்ந்தது என்றே கூறலாம். இதை தொடர்ந்து தற்போது லாரன்ஸ் நடிக்கும் அடுத்த படமான அதிகாரம் படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்று வெளியாகியானதுது. இந்த படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் எழுதி தயாரிக்க துரை செந்தில் குமார் இந்த படத்தை
இயக்குகிறார். வெற்றிமாறன் இயக்கிய அணைத்து படங்களுமே வெற்றிப்படங்கள் தான் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் நேற்று இவர் நடிக்கும் புதிய படமான துர்கா படத்தின் first look மற்றும் second look போஸ்டர்களை வெளியிட்டிருந்தார் லாரன்ஸ்.
சில பாராட்டுகள் கிடைத்தாலும் பெரும்பாலானோர் மீண்டும் ஒரு பேய் படமா என்று விமர்சித்து வந்தனர். அந்த வகையில்
இந்த படத்தின் second look போஸ்டர் selfie எடுத்து எடிட் பண்ணது போல் இருக்கிறது என்று பல நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in