சினிமா பின்னணியே இல்லாமல் சினிமாவில் நுழைந்து தனக்கென தனி சிம்மாசனத்தை உருவாக்கியவர் தான் நடிகர் தனுஷ்! கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை செல்லும் அளவிற்கு நடிப்பால் உயர்ந்த ஒரு உன்னத கலைஞர் இவர் என்றால் அது மிகையாகாது! பெரிய தோரணைகள் இல்லாமல் எளிதாகவும் பக்கத்து வீடு பையன் போல் இருக்கும் இவரை தமிழ் மக்கள் மட்டும் இல்லாமல் இந்திய மக்களும் இவரை கொண்டாட தொடங்கியுள்ளனர்! ஏனெனில் இந்தியிலும் படம் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் ஆகும்!
இந்தியில் இவர் அறிமுகமான படத்தின் பெயர் “ராஞ்சனா”. அந்த படத்தை இயக்கியவர் தான் ஆனந்த் எல்.ராய். அந்த படம் அவருக்கு நல்ல பெயரை பாலிவுட்டில் ஈட்டி தந்தது! அதனையடுத்து அவர் அதே இயக்குனர் இயக்கத்தில் இந்தியில் அடுத்து நடித்துள்ள படத்தின் பெயர் தான் “அத்ரங்கி ரே” இந்த படத்தில் இவருடன் சாரா அலி கான், அக்க்ஷய் குமார் உட்பட பலரும் நடித்துள்ளனர்! இந்த படத்தில் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது!
2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி வெளியாகவேண்டியது இந்த படம்! சில பல காரணங்களுக்காக தள்ளி போடப்பட்டு இருந்தது! மீண்டும் பல மாதங்கள் கழித்து ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட இறுதியில் திரையரங்குகளில் இல்லாமல் ஓடீடீயில் தான் வெளியாகும் என செய்திகள் வெளியாகின! அதே போலவே டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் இந்த படம் வெளியாகவுள்ளது!
தமிழில் தனுஷுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் தமிழிலும் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்! அதனால் இந்தி தலைப்பை தமிழில் ஒத்தி வைத்துவிட்டு 1968ம் ஆண்டு சிவாஜி கணேசன் ஜெயலலிதா நடித்த கலாட்டா கல்யாணம் படத்தின் தலைப்பையே இந்த படத்திற்கும் தலைப்பாய் வைத்துள்ளனர் படக்குழுவினர்! இப்பொழுது அந்த படத்தின் ட்ரைலெர் வெளியாகியுள்ளது! அதை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below!….
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in