ஹாலிவுட்டில் காமெடிக்கு புகழ்பெற்றவர் சார்லி சாப்ளின் என்பது போல் தமிழ் சினிமாவிற்கு ஒரு காலத்தில் காமெடிக்கு புகழ்பெற்ற நடிகராக இருந்தவர் கவுண்டமணி. கவுண்டமணி செந்தில் இணைந்தாலே அந்த படத்தில் காமெடி சூப்பராக இருக்கும் என்று மக்களுக்கு நம்பி படத்தை பார்க்க வருவார்கள். அந்த அளவிற்கு அவர்களின் காமெடி உச்சம் தொட்டு இருந்தது என்றே கூறலாம். சமீபகாலமாக கவுண்டமணியின் உடல் நலக்குறைவால் அவர் தற்போது படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். ஆனால் இவர் ஏற்கனவே தமிழ் சினிமாவில் நடித்த படங்கள் எண்ணில் அடங்காதவை.
இவரும் நடிகர் சத்யராஜும் ஒரே ஊர் காரர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இதுவரை சத்யா ராஜும் கவுண்டமணியும் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். இந்நிலையில் சத்யா ராஜின் குடும்பம் கௌண்டமணியோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சத்திய ராஜின் மனைவி , அவரது மகன் சிபிராஜ், அவரது மகள் திவ்யா ஆகியோர் கௌண்டமணியுடன் புகைப்படம் எடுத்துள்ளனர். சிபிராஜ் தற்போது தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் கதாநாயகன். அவரது சின்ன வயசில் கௌண்டமணியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் வைரலாக்கி வருகின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in