இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் அடங்கிய டி20 தொடர் இன்று துவங்குகிறது. அகமதாபாத்தில் இன்று 7 மணியளவில் இந்தியா இங்கிலாந்தின் முதல் டி 20 போட்டி நடக்க இருக்கிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளுமே தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். டெஸ்ட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றியை பதிவு செய்ததை தொடர்ந்து இந்தியாவை டி 20 தொடரில் பழிதீர்க்க இங்கிலாந்து அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதே சமயத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய வீரர்களும் டி 20 தொடரை கைப்பற்ற பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலகில் உள்ள கிரிக்கெட் அணிகளுள், டி 20 தொடர் என்றாலே மிகவும் கடினமான அணி இந்தியா தான். அப்படி இருக்கும் பட்ச்சத்தில் இங்கிலாந்து அணிக்கு இந்தியாவை தோற்கடிப்பது மிகவும் சவாலான காரியமாக இருக்கும். இந்நிலையில் தற்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இது வரை எந்த ஒரு அணியின் வீரரும் படித்திராத சாதனையை படைக்க போகிறார். உலகளவில் மிக சிறந்த பேட்ஸ்மேன் ஆகா விளங்குபவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. உலகம் முழுவதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இது வரை சர்வதேச அளவில் டி 20 தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார்.
இவர் இதுவரை 2928 ரன்களை விளாசி முதல் இடத்தை பிடித்துள்ளார். 85 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள விராட் கோலி, 25 அரை சதங்களை கடந்திருக்கிறார். இதை தொடர்ந்து தற்போது நடைபெற இருக்கும் இங்கிலாந்து டி20 தொடரில் 72 ரன்களை குவித்து விட்டார் என்றால் சர்வதேச டி20 போட்டிகளில் 3000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார். இவரை அடுத்து இந்திய அணியின் சர்வதேச கிரிக்கெட் வீரரான ரோகித் ஷர்மாவும் உலக சாதனை படைக்கும் வாய்ப்பை அடைந்துள்ளார். சர்வதேச அளவில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்துள்ள வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் ரோகித் சர்மா 3வது இடத்தில் இருக்கிறார்.
இதுவரை இவர் 108 டி20 போட்டிகளில் 4 சதமும், 21 அரை சதமும் விளாசி 2773 ரன்களை குவித்துள்ளார். இந்நிலையில் இவரும் முதல் இடத்தை பிடித்து பெருமையடையும் வாய்ப்பை பெற்றுள்ளார். தற்போது சர்வதேச அளவில் முதல் இடத்தை பிடிக்க போகும் வீரர் ரோகித் சர்மா வா விராட் கோலியா என்ற போட்டி இந்திய அணிக்குளேயே நடந்து வருகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in