இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நேற்று துவங்கியது. ஏற்கனவே நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் 3க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்தியா டி 20 தொடரின் முதல்போட்டியிலேயே இங்கிலாந்திடம் சுருண்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய இந்திய அணியின் வீரரான ஷிக்கர் தவன் மற்றும் கே.எல்.ராகுல் ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி கொண்டிருந்தனர். ஆட்டத்தின் 2வது ஒவேரிலேயே கே.எல்.ராகுல் ஆட்டமிழக்க அவருடன் களம் இறங்கிய ஷிக்கர் தவன் நீண்ட நேரம் தத்தளித்து அவுட் ஆகி சென்றார்.
அதன் பிறகு களம் இறங்கிய விராட் கோலி எதிர்பாராத விதமாக விக்கெட்டை இழந்து சென்றார். போட்டியில் துவக்க ஆட்டக்காரராண ரோஹித் சர்மா இல்லாத காரணத்தால், இந்தியாவிற்கு நல்ல துவக்கம் கிடைக்கவில்லை. இந்நிலையில் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்திருந்த இந்திய அணிக்கு சிறந்த பாட்னர்ஷிப் அமையவில்லை. துவக்கத்தில் சிறப்பாக ஆடிய ரிஷப் பந்த் கேட்ச் அவுட் ஆகி வெளியேறினார். 10 வர்களில் 48 ரன்களை மட்டுமே அடித்திருந்த நிலையில் அவருக்கு அடுத்து களம் இறங்கிய ஷ்ரேயஸ் அய்யர் இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.
அவரோடு களம் இறங்கிய ஹர்திக் பாண்டியா அவருக்கு கைகொடுத்தார். பாண்டியா 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷ்ரேயஸ் ஐயர் 67 ரன்களை அடித்து இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியாக 20 ஓவர்களில் இந்திய அணி 124 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. 125 அடித்தால் வெற்றி என்ற இலக்கோடு களம் இறங்கிய இங்கிலாந்து அணி 16 ஓவர்களிலேயே ஆட்டத்தை முடித்து விட்டது. துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்தனர் . அவர்களுக்கு பிறகு காளம் இறங்கிய டேவிட் மிலன் மற்றும் ஜானி பேர்ஸ்டோ மீண்டும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து 15.3 ஓவர்களில் ஆட்டத்தை முடித்தனர்.
டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியாவை பழிவாங்கும் விதமாக டி 20 தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியுள்ளது இங்கிலாந்து. அடுத்து வரும் போட்டிகளில் இந்தியா இதற்க்கு பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in