இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி!

இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டி 20 போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து முடிந்தது. முதல் போட்டியில் இங்கிலாந்திடம் மண்ணை கவ்விய இந்திய அணி இந்த முறை பதிலடி கொடுக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரது மனத்திலும் இருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 164 ரன்களை எடுத்த நிலையில் , 165 என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி தன் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்தை வீழ்த்தி 2வது போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி! 1

விளம்பரம்

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் அடித்து ஆடினாலும் போக போக இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாத இங்கிலாந்து அணி வீரர்கள் சுருண்டனர். 180 ரன்களை அடிப்பார்கள் என்று எதிர்ப்பார்த்த நிலையில் 164 ரங்களுக்குள் சுருண்டு போனது இங்கிலாந்து அணி. இதை தொடர்ந்து 165 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்கோடு களம் இறங்கிய இந்திய அணி வீரர்கள் வழக்கம் போல் ஆரம்பத்தில் தடுமாறினார்.

இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி! 2

விளம்பரம்

முதலில் களம் இறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் ஷிக்கர் தவன் சென்ற போட்டியில் ரன்கள் ஏதும் அடிக்காமல் வெளியேறிது போல் இந்த போட்டியிலும் வெளியேறினார். அதன் பிறகு களம் இறங்கிய இஷான் கிஷன் பந்தை பவுண்டரி சிக்ஸ் என்று வெளுத்து வாங்கினார். தன முதல் சர்வதேச போட்டி என்று பாராமல் அதிரடியாக விளையாடி முதல் போத்தியிலேயே அரை சதத்தை பூர்த்தி செய்தார். இந்திய அணிக்கு ரன்கள் சேர்த்து கொடுத்த இஷான் கிஷன் 56 ரன்களை குவித்து வெளியேறிய பின்பு கேப்டன் விராட் கோலி களம் இறங்கினார்.

இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி! 3

விளம்பரம்

பழைய கோலி பாக் டு பார்ம் என்று கூறும் அளவிற்கு இறுதி வரை அற்புதமாக விளையாடி 73 ரன்களை குவித்தார். இறுதிவரை விளையாடிய விராட் கோலி சிவப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற செய்தார். இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டி 20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றுள்ளது.

 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment