கிரிக்கெட் என்றாலே ஒரு கொண்டாட்டம் தான். அதிலும் குறிப்பாக இந்திய ரசிகர்கள் பற்றி சொல்லவே வேண்டாம். கிரிக்கெட் வீரர்கள் போன்று உடை அணிவது, அவர்கள் நடிக்கும் விளம்பரத்தில் வரும் பைக் வாங்குவது, அவர்களை போலவே முடி திருத்தும் வைத்து கொள்வது என்று கிரிக்கெட் ரசிகர்கள் என்று சொல்வதை விட கிரிக்கெட் வெறியர்கள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இருக்கும் ரசிகர்களுக்காகவே ஐபிஎல் நடத்த பட்டு வருகிறது . கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தாக்கம், அரபு நாடுகளில் நடந்த போட்டிகளால் சற்று சுணக்கம் குறைந்து காணப்பட்டது ஐபிஎல். இந்த முறை போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடர் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ள நிலையில் இதற்கான ஏலம் இன்று நடைபெறுகிறது. இதில் பல மாற்றங்கள் நடைபெறும். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்த வரை தொடக்க ஆட்டக்காரரான டூப்ளிஸிஸ் (FAF Du Plessi) பெங்களூரு அணிக்கு சென்று விட்டார். இவரை பெங்களூரு அணி 7 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இதனால் சென்னை ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.
இந்த முறை ஐபிஎல் இந்தியாவில் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இன்று சென்னை அணியில் மீண்டும் பிராவோ 4.4 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். பிராவோ 2011 முதல் சென்னை அணியில் ஆடி வருவது குறிப்பிடத்தக்கது. ராபின் உத்தப்பா 2 கோடிக்கு எடுத்துள்ளனர். சுரேஷ் ரெய்னா இன்னும் ஏலம் எடுக்கப்படவில்லை.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in