உலகின் மிக சிறந்த டி 20 தொடர் என்றால் அது ஐ.பி.எல் தொடர் தான். கடந்த 2020 ஐ.பி.எல் தொடர் துபாயில் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்டது. இதனால் கடந்த 2014 க்கு பிறகு தற்போது ஐ.பி.எல் தொடரின் மதிப்பு சரிந்துள்ளது என்று கூறப்படுகிறது. ஐ.பி.எல் லை திருவிழா போல் ரசித்து பார்த்து கொண்டிருந்த சமயத்தில் கொரோனா தோற்று பாதிப்பால் ஐ.பி.எல் தொடருக்கு இந்தியாவில் தடை விதிக்க செய்தது. பின்னர் ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடியாக காணப்படும் மைதானங்களை பார்க்கும்போது ரசிகர்களை மிகவும் சோகத்திற்குள்ளாகக்கியது.
தற்போது 2021 ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் நடைபெற போகிறது என்றாலும் ஆரம்பத்தில் சில போட்டிகளுக்கு ரசிகர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது என்று பல கட்டுப்பாடுகளுடனே நடக்க இருக்கிறது. ஐ.பி.எல் யில் அதிக ரசிகர்களை கொண்ட அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் தான்.
தல தோனி இந்த அணியில் இருப்பதாலேயே இந்த அணிக்கு ஏராளமான ரசிகர்கள் உலகமெங்கும் உள்ளானர். மூண்டு முறை ஐ.பி.எல் தொடரை கைப்பற்றி இருக்கும் இந்த அணி கடந்த 2020 ஐ.பி.எல் தொடரில் சரியாக பெர்பார்ம் செய்யவில்லை.அந்த தவறை இந்த வருடம் செய்து விட கூடாது என்பதற்காக உத்தப்பா , கிருஷ்ணப்ப கவுதம் , மோயின் அலி , புஜாரா ஆகிய வீரர்களை தேர்வு செய்துள்ளது சென்னை அணி.
https://twitter.com/imjadeja/status/1378995986547154946
வரும் சனிக்கிழமை அன்று டெல்லி அணியுடன் மோதும் csk அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை அணியின் தவிர்க்க முடியா வீரர் ஜடேஜா பயிற்சிகாக கிரௌண்டில் என்ட்ரி கொடுக்கும் விடியோவை வெளியிட்டுள்ளார். அதுவும் கடந்த பொங்கலுக்கு வெளியாகி வசூலை குவித்த மாஸ்டர் படத்தின் விஜய் பிஜிஎம் உடன் வீடியோ பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ விஜய் ரசிகர்களின் மூலம் வைரலாகி வருகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in