தற்போது உள்ள தமிழ் சினிமா இயக்குனர்களுள் மூன்றே படங்களில் முன்னேறி காட்டிய இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படத்தின் வெற்றுரை தொடர்ந்து தற்போது கமல்ஹாசனை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்க இருக்கிறார் லோகேஷ். இந்த படத்தின் பஸ்ட் லுக் வீடியோ ரிலீசாகி இதை கலக்கியது. ஆனால் தற்போது வரை இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்காமல் இருக்கின்றது. தேர்தல் நேரம் நெருங்கி கொண்டிருப்பதால் கமலஹாசன் பிரச்சார வேளைகளில் மும்மரமாக பணியாற்றி வருகின்றார்.
தேர்தலுக்கு முன்பே படத்தை முடிக்க வேண்டும் என்று நினைத்த லோகேஷ் கனகராஜிற்கு தேர்தல் வேலைகளில் கமல் பிஸியாக இருக்கிறார் என்றதால் மே மாதத்திற்கு மேல் படப்பிடிப்பை துவங்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் படத்திற்கான நடிகர்கள் நடிகைகளை தேர்வு செய்யும் தேடுதல் வேட்டையில் குதித்துள்ளார் லோகேஷ். அதிலும் இதுவரை கமலுடன் ஜோடி சேராத நடிகை தன் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் லோகேஷ். இந்நிலையில் தற்போது விக்ரம் படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். இதற்காக நயன்தாராவிடம் கால் ஷீட் கேட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இதுவரை பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த நயன்தாரா கமலுடன் இதுவரை கை கோர்த்தது கிடையாது. அப்படி விக்ரம் படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார் என்றால் இதுவே கமலுடன் நயன்தாரா நடிக்கும் முதல் படமாக இருக்கும். பொதுவாக பெரிய ஹீரோக்கள், தன் படத்தில் இந்த நடிகை தான் நடிக்க வேண்டும் என்று கூறுவது வழக்கம். அதேபோல் இந்த படத்திலும் நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என்று லோகேஷ் கனகராஜிடம் கமலஹாசன் கூறியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜும் தன் படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க வேண்டும் என கால் ஷீட் காக காத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in