தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கிட்டத்தட்ட சினிமாவில் உள்ள அணைத்து சூப்பர்ஸ்டார்ஸ் உடனும் இவர் ஜோடியாக நடித்திருக்கிறார். இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தமிழ் ,தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிகையாக கலக்கி வருகிறார்.இவர் இறுதியாக நடித்த திரைப்படம் மிஸ் இந்தியா திரைப்படம். அதற்க்கு முன்பு நடித்த பென்குயின் ஆகட்டும் மிஸ் இந்திய திரைப்படம் ஆகட்டும் இரண்டுமே ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் நடித்த நடிகையர் திலகம் என்ற படம் தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்து. தற்போது இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹலோ படத்தின் மூலம் பிரபலமான நடிகை கல்யாணி பிரியதர்ஷனுடன் கீர்த்தி சுரேஷ் குழந்தை பருவத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
https://twitter.com/KeerthyOfficial/status/1378966206711926785
கல்யாணி ப்ரியதர்ஷன் தமிழில் சிவகார்த்திகேயனுடன் ஹீரோ படத்தில் நடித்திருந்தார். பிறகு தற்போது சிம்புவின் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். தற்போது கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in