விஜய் ஆண்டனி நடிக்கும் கோடியில் ஒருவன் ட்ரைலர்!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக மாறிய நடிகர் விஜய் ஆண்டனி. இவர் இசையமைத்த பல படையல்கள் இன்றும் பலரது favourite லிஸ்டில் உள்ளது. அந்தளவிற்கு சிறந்த இசைமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி நான் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவரது முதல் படமான நான் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து வந்தார் விஜய் ஆண்டனி. சலீம் , பிச்சைக்காரன் போன்ற வெற்றிப்படங்களை இவருக்கு தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்து கொடுத்தது.

விஜய் ஆண்டனி நடிக்கும் கோடியில் ஒருவன் ட்ரைலர்! 1

விளம்பரம்

இதை தொடர்ந்து தற்போது விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் கோடியில் ஒருவன். இந்த படத்தை அனந்த கிருஷ்னன் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்துள்ளார். மீசையை முறுக்கு படத்திற்கு பிறகு ஆத்மிகா நடிக்கும் படம் இது தான். எற்கனவே இந்த படத்தின் டீஸர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி டியூஷன் மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதை தொடர்ந்து இந்த படத்தின் பாடல்களும் வெளியாகி வைரலானது. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

Kodiyil Oruvan - Official Trailer | Vijay Antony | Aathmika | Ananda Krishnan | Nivas K Prasanna

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment