சுந்தர பாண்டியன் திரைப்படம் மூலம் அறிமுக மாகி இன்று பலரும் அறிந்த பிரபல நடிகையாக இருப்பவர் லட்சுமி மேனன். இவரது முதல் திரைப்படம் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த சுந்தர பாண்டியன் மிக பெரிய வெற்றி பெற்றது. இன்று கிளாமராக நடிக்கும் பல முன்னணி நடிகைகளுக்கு நடுவில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வரும் நடிகை லட்சுமி மேனன்.
இதன் பிறகு நடித்த கும்கி திரைப்படமும் இவருக்கு பெரும் புகழும் பெற்று தந்து மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. சினிமாவிற்குள் காலடி எடுத்துவைத்த உடனேயே தொடர்ந்து 2 வெற்றி படங்களை கொடுத்தார் லட்சுமி மேனன். அதன் பின்னர் பாண்டிய நாடு , கொம்பன், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களில் நடித்தாலும் குட்டி புலி , ரெக்க ஆகிய தோல்வி படங்கள் இவரது வெற்றி பாதையை சரித்துவிட்டது.
இவர் இறுதியாக நடித்த திரைப்படம் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த புலிக்குத்தி பாண்டி. இந்த படம் திரையில் வெளிவராமல் , சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்ப பட்டது. இருப்பினும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த கொரோனா காலத்தில் பல பிரபலங்கள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர்.
அதே போல் லட்சுமி மேனனும் தன்னுடைய ரசிகர்களோடு உரையாடிக்கொண்டிருந்தபோது , ஒருவர் நீங்கள் 3 வருடமாக relationship ல் இருந்தீர்களா என்று கேட்ட கேள்விக்கு ஆமாம் என்று பதிலளித்துள்ளார். இதனால் ரசிகர்கள் யாருடன் 3 வருடம் relationship ல் இருந்திருப்பர் என்ற குழப்பத்துடன் இருக்கின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in