சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சவரணன் ஒரு புதிய அவதாரம் எடுத்துள்ளார். தற்போது அவர் பெயரிடப்படாத படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019-ல் தொடங்கியது. ஆனால் கடந்தாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு பாதியில் நின்றுபோனது. இதனை தொடர்ந்து தற்போது இந்தப் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்படத்தை சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜேடி-ஜெர்ரி இயக்குகின்றனர். இவர்கள் ஏற்கெனவே, விக்ரம், அஜீத் நடித்த ’உல்லாசம்’, விக்ரமாதித்யா, ஷெரின் நடித்த ’விசில்’ படங்களை இயக்கியவர்கள். பெஸ்ட்டு பெஸ்ட்டு என்று நடனமாடி கொண்டிருந்த லெஜென்ட் சரவணன் தற்போது ஈஸ்ட்டு வெஸ்ட்டு என்று சண்டைக்காரர்களை பரக்க விடும் புகைப்படம் வைரலாகி வருகிரது.
இந்தப்படத்தில் கதாநாயகியாக வட இந்திய மாடல் ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இயக்கும் படம் பேண்டஸி கதையை கொண்டது என்று கூறப்படும் நிலையில், இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ஹீரோவாக நடிக்கும் சரவணனே படத்தை தயாரிக்கிறார்.
கடந்தாண்டு இப்படத்தின் பிரம்மாண்ட டூயட் பாடலுக்கான செட் அமைக்கப்பட்டு அதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலான நிலையில், தற்போது இப்படத்தில் சரவணன் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.
Video Credits: Behindwoods Tv
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in