கர்ணன் படத்தின் கதையை ஒரே ஒரு பலகையை வைத்தே மக்களுக்கு 20 வருடத்திற்கு முன்பே எடுத்துக்கூறிய லிவிங்ஸ்டன் திரைப்படம். தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல கூடிய இயக்குனர்கள் பலர் தற்போது கால் பதித்துவிட்டனர். அந்த வரிசையில் தற்போது சிறந்த இயக்குனராக வளம் வருபவர் மாரி செல்வராஜ். இவரது முதல் படமான பரியேறும் பெருமாள் இது தான் இவரது முதல் படமா என்று வியந்து பார்க்க கூடிய அளவிற்கு வெற்றியை தேடி தந்தது.
இந்நிலையில் தற்போது இவர் தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தின் டீசர் வெளியானபோதே படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்புகள் இருந்தது. பல எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியான இந்த படம் பெரியளவில் வெற்றிபெற்றது. மாரி செல்வராஜ் முதலில் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்தை விட பல மடங்கு வசூலை குவித்தது கர்ணன். இந்நிலையில் தற்போது 2001 ஆம் ஆண்டு லிவிங்ஸ்டன் நடிப்பில் வெளி வந்த படம் தான் என் புருஷன் குழந்தை மாதிரி திரைப்படம்.
இந்த படத்தில் தேவயானி , வடிவேலு என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்கியவர் எஸ்.பி ராஜ்குமார். இந்த படத்தின் ஒரு காட்சியில் பஸ் ஸ்டாப்பில் பஸ் நிறுத்தம் என்ற பலகை வைக்கப்பட்டிருக்கும். அதில் மேலும் பஸ் நிறுத்தவில்லை என்றால் நிறுத்தபடும் என்றும் எழுதியிருக்கும்.
கர்ணன் படத்திலும் பேருந்து வசதி இல்லாமல் ஒரு கிராமமே கஷ்டப்படுவது போல் காட்சியமைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் தற்போது இந்த படத்தில் வைத்து போல் கர்ணன் படத்திலும் ஒரு பலகை வைத்திருக்கலாமே என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in