தமிழ் சினிமாவில் அன்று முன்னணி இயக்குனர்கள் இருந்த இடத்தை வெறும் மூன்றே படங்களின் மூலம் நிரப்பிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் வெளிவந்த மூன்று திரைப்படங்களுமே மக்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்தது என்றே கூறலாம். முதலில் இவர் இயக்கிய மாநகரம் பெரிய அளவில் வசூலிக்கவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது. அதன் பிறகு கார்த்தியை வைத்து இவர் இயக்கிய கைதி திரைப்படம் மிக சிறந்த வரவேற்பையும் பெற்று வெற்றி படமாக அமைந்தது.
இதன் தொடர்ச்சியாக தற்போது இவர் விஜய் மற்றும் விஜய்சேதுபதியை வைத்து இயக்கிய மாஸ்டர் திரைப்படம் வசூல் அளவில் பெரிய சாதனை படைத்ததோடு மட்டுமல்லாமல், லோகேஷ் கனகராஜிற்கு பெரும் புகழும் பெற்று தந்தது. இன்றைய காலத்தில் முன்னணி இயக்குனர்களே இப்படிப்பட்ட மாபெரும் வெற்றியை கொடுப்பதற்கு தடுமாறி வரும் நிலையில் தனது தனித்துவமான டைரக்ஷன் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார் லோகேஷ். தற்போது இவர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகி வைரலானது.
இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜின் பிறந்த நாள் சென்றது. அதற்கு பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். அதோடு மட்டுமில்லாது தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் சேர்ந்து லோகேஷிற்கு பெரியளவில் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். லோகேஷின் பிறந்தநாளை ஒட்டி டைரக்டர் ஷங்கர் , கவுத்தம் மேனன், மணிரத்னம் , லிங்குசாமி ஆகிய முன்னணி இயக்குனர்கள் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த போட்டோவை லோகேஷ் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/Dir_Lokesh/status/1371826332296908809
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in