ஒரு காலத்தில் இயக்குனர்கள் என்றாலே மணிரத்னம்,ஷங்கர், பாரதிராஜா, என பெரிய இயக்குனர்களை மட்டுமே குறிப்பிட்டு கூறுவோம். ஆனால் இன்று பல இளம் இயக்குனர்கள் சினிமாவில் கால் பதித்து தங்களது முதல் படத்தையே முத்திரை பாதிக்க துவங்கிவிட்டனர். அந்த வரிசையில் தற்போது தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜுக்கு பெரும் பங்கு உண்டு. இவர் ஆரம்ப காலத்தில் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக இருந்து கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, ஆகிய திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார்.
ஆரம்ப காலத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று இவருக்கு இருந்த ஆசை படி படியாக இயக்குனராக வேண்டும் என்று மாறியுள்ளது. சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடிப்பில் வெளிவந்த பரியேறும் பெருமாள் திரைப்படம் தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க செய்தது. இயக்குனர் பாரதி ராஜாவும் மாரி செல்வராஜை புகழ்ந்து ஒரு மேடையில் பேசி இருப்பர்.
அந்தளவிற்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் படி தரமான படைப்பை கொடுத்தார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் கருவை சிங்கள் பிரேமில் கூறியிருப்பார். இவர் தற்போது கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பரவியது.
இந்நிலையில் சமீபத்தில் மாரி செல்வராஜ் பிறந்தநாளை முன்னிட்டு இவர் குத்தாட்டம் போடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாரி செல்வராஜ் நாட்டுப்புற குத்தாட்ட பாடலுக்கு நாட்டுப்புற ஸ்டைலில் நடனமாடியிருப்பர். அவருடன் நடனமாட வந்த சாண்டி மாஸ்டரே ஒரு நிமிடம் ஆடுவதை நிறுத்திவிட்டு மாரி செல்வராஜின் ஆட்டத்திற்கு கைதட்டி உற்சாகமூட்டுவார். அவர் மட்டுமல்ல மாரி செல்வராஜ் ஆடும்பொழுது அந்த அரங்கில் உள்ள அனைவரின் பார்வைகளும் இவர் மேல் திரும்பி அவர் ஆட்த்திற்கு கைதட்டி ரசிப்பார்கள். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/Mari_SelvarajFC/status/1368477993719373824?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1368477993719373824%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.tamil360newz.com%2Fkarnan-movie-director-dance-video-viral-in-social-media%2F
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in