தமிழ் சினிமாவில் எளிதாக உள்ளே நுழைந்தாலும் நல்ல நிலைக்கு வந்து அதை தக்கவைத்து கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல. அப்படி எளிதாக சினிமாவிற்குள் வந்த பல நடிகர்கள் தோற்றுப்போய் இருக்கிறார்கள். ஆனால் பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்றால் அது தளபதி விஜய் தான். பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.
இவர் இறுதியாக நடித்து வெளி வந்த படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு மாநகரம் , கைதி என இரண்டு படங்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஆனால் இரண்டு படமுமே மக்களை அதிகமாக கவர்ந்திழுத்ததால் அடுத்த படமே தளபதி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து பெரிய படத்தை இயக்கினார் லோகேஷ். சமீபகாலமாக இவர் இயக்கிய
கைதி திரைப்படம் ஒரு திருட்டு கதை என்ற செய்தி பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து , மாஸ்டர் பட நடிகர் ஒருவர் லோகேஷ் மீது மற்றொரு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் க்கு நண்பனாக நடித்தவர் நடிகர் பிரேம். இந்த படத்தில் இவரை நடிக்க
வைப்பதற்கு முன்பு லோகேஷ் இவரிடம் நீங்கள் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் என்று கூறியுள்ளார். ஆனால் படத்தில் இவர் வெறும் 2, 3 காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தார். இவர் நடித்த பல காட்சிகளை லோகேஷ் நீக்கிவிட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால் ஒப்பந்தம் செய்தபோது படத்தில் முக்கியமான கதாபாத்திரம் என்று கூறி தான் நடிகர் பிரேமை ஒப்பந்தம் செய்தார் என்று கூறப்படுகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in