தனக்கு அணியப்பட்ட கிரீடத்தை தனது தாய்க்கு அணிவித்து அழகு பார்த்த மிஸ் இந்தியா பெண்மணி!

திறமை இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் இந்த உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு சாதிக்கலாம். சாதனைகள் நம்மை தேடி வருவதில்லை , நாம் உருவாக்குவதே. இதற்கு உதாரணமாக இங்கு ஒரு பெண் தன் குடும்பமே பெருமை படும் அளவிற்கு பெரியளவில் சாதித்துளார். சாதாரண ஆட்டோ காரரின் மகளாக பிறந்து இந்த மாடெலாக பெருமை சேர்த்துள்ள பெண்மணி மான்யா சிங். மான்யா சிங் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்.

தனக்கு அணியப்பட்ட கிரீடத்தை தனது தாய்க்கு அணிவித்து அழகு பார்த்த மிஸ் இந்தியா பெண்மணி! 1

விளம்பரம்

இவரது அப்பா ஆட்டோ ஒட்டி வருகிறார். வறுமையிலும் பள்ளி கல்லூரி படிப்பை மான்யா படிக்கும் நேரங்களை தவிர்த்து வீட்டு வறுமைக்காக பக்கத்து வீடுகளில் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டார். வறுமையில் இருக்கும் தன் குடும்பத்தை உயர்த்த , மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தார் மான்யா சிங். இதை தொடர்ந்து மான்யா சிங்கை கெளரவப்படுத்தும் விதமாக அவர் படித்த கல்லூரியில் விழா கொண்டாடியுள்ளனர்.

தனக்கு அணியப்பட்ட கிரீடத்தை தனது தாய்க்கு அணிவித்து அழகு பார்த்த மிஸ் இந்தியா பெண்மணி! 2

விளம்பரம்

அதில் கலந்து கொண்ட மான்யா தன் அப்பாவின் ஆட்டோவிலேயே வந்து இறங்கி , தன் அம்மாவின் காலை தொட்டு வணங்கினர். பிறகு உள்ள அவருக்கு அணியப்பட்ட கிரீடத்தை , எடுத்து அவர் அம்மாவின் தலையில் வைத்து அழகு பார்த்தார். இந்த காலத்தில் பெற்றோர்களை போலவே பிள்ளைகளும் இருப்பது கிடையாது. சாதிக்க முயலும் ஒவ்வொருவருக்குமே இந்த நிகழ்வு ஒரு சிறந்த உதாரணமாய் இருக்கும்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment