67 வது தேசிய விருதுகள் வென்ற தமிழ் திரைப்படங்களின் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. முதலில் சிறந்த தமிழ் படம் என்ற விருதை வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படம் பெற்றுள்ளது. வெற்றிமாறன் என்றாலே வெற்றி தான் என்பதற்கு ஆடுகளம் முதல் அசுரன் படம் வரை அணைத்து படங்களும் ஒரு எடுத்துக்காட்டு. இதில் சிறந்த நடிகர் என்ற விருதை அசுரன் திரைப்படத்திற்காக தனுஷ் பெற்றுள்ளார். தமிழ் சினிமாவில் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் தனுஷ் வெல்லும் 2வது தேசிய விருது இது. இதை தொடர்ந்து பல திரை பிரபலங்கள் தனுஷிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.Watch Tamil Films National Awards 2020 Winners List Below
ஸ்பெஷல் ஜூரி விருதை பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படம் வென்றுள்ளது. புது விதமான கதைக்களத்துடன் தன்னுடைய தத்ரூபமான நடிப்பில் வெளிவந்த பார்த்திபனின் ஒத்த செருப்பு தபோது விருது வென்றுள்ளது. சிறந்த இசையமைப்பாளர் என்ற விருதை விசுவாசம் படம் பாடல்களுக்காக டி.இம்மான் பெற்றுள்ளார். சிறந்த குண சித்திர நடிகர் என்ற விருதை சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வென்றுள்ளார். ஹீரோ என்பதையும் தாண்டி நல்ல நடிகர் என்பதையும் நிரூபித்து விட்டார் விஜய் சேதுபதி. சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற விருதை கேடி என்கிற கருப்புதுறை படத்திற்காக நாக விஷால் பெற்றுள்ளார்.தேசிய விருது பெற்ற அனைவருக்கும் பல திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in