இந்திய அணி வீரர்கள் ஆஸ்ட்ரேலியா சுற்றுப்பயணம் சென்ற நிலையில் அங்கு பல கிரிக்கெட் போட்டிகளை ஆஸ்ட்ரேலியா அணியுடன் விளையாடி வந்தது. இதில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்தாலும், டி 20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடர் போன்ற போட்டிகளை தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக காப்பா மைதானத்தில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றது வரலாற்றில் இடம்பெறும் விதமாக அமைந்துள்ளது.
ஆஸ்ட்ரேலியா உடனான போட்டியில் எதனை மறந்தாலும் தமிழக வீரர் நட்ராஜனை யாராலும் மறக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் இவர் நெட் பவுலிங் வீரராக அணியில் இடம் பெற்று இருந்தார். அதற்கு பிறகு வருண் மற்றும் சைனிக்கு உண்டான காயம் காரணமாக டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் சேர்க்கப்பட்டார். அதற்கு பிறகு அந்த வாய்ப்பை இவர் செம்மையாக பயன்படுத்தி கொண்டார்.
சமி, உமேஷ், பும்ரா என தொடர்ந்து பவுலிங் செய்பவர்கள் காயம் படவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இடம் பெற்று விட்டார். தாக்கூர், அகர்வால், வாஷிங்டன் சுந்தர், நட்ராஜன் ஆகிய வீர்ரகள் அறிமுகப்படுத்தி இருந்தது இந்திய அணி, இந்த வாய்ப்பையும் அவர் சிறப்பாக பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி கிரிக்கெட் டிவிட்டர் பக்கத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு வரவேற்கிறோம். ஒரே சுற்று பயணத்தில் அனைத்து போட்டிகளிளும் இடம் பெற்ற முதல் இந்திய வீரர் நட்ராஜன் தான் என்று பாராட்டி உள்ளனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in