நெட் பவுலராகா அறிமுகம் ஆகி மூன்று வித டைப் பவுலிங் செய்து சாதனை படைத்துள்ளார் தமிழ் கிரிக்கெட் வீரரான நடராஜன். இவரது சாதனை அனைத்துமே கிரிக்கெட் வரலாற்றில் இடம் பெற வேண்டிய நிலையில் உள்ளது. வெற்றி பெறுவதற்காக அவர் எவ்வளவு உழைத்தார் என்பதை விட வெற்றியை தக்க வைக்க அவர் எவள்ளவு உழைக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. அதுதான் அவரை மேலும் மேலும் உயர்த்திற்கு கொண்டு போகும் என்பது அவர் அறிந்த ஒன்றே.
இந்த நிலையில் இர்பான் பதான் சமீபத்தில் நம்ம நட்ராஜன் பத்தி கருத்தை பதிவு செய்து உள்ளார். அவர் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் நட்ராஜனின் எதிர்கால முன்னேற்றம் பற்றியே தவிர வேறு ஏதுமில்லை. நட்ராஜன் முக்கியமாக இவர் கூறிய அனைத்து கருத்துக்களையும் எடுத்து கொண்டு தன்னுடைய விளையாட்டில் எடுத்து கொண்டு செயல்படுத்த வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.
இடது கை பந்து வீச்சாளர் மிக முக்கியமான பங்கை வகிப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அவர்கள் தான் பேட்ஸ்மேனை எளிதாக விக்கெட் இழப்புக்கு தள்ள முடியும் என்று கூறிவிட்டு நட்ராஜன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சாதிக்கத் நிறைய முயற்ச்சி செய்ய வேண்டும். அதில் அவர் ஆங்கிள் ரிதம் பற்றி முழு கவனம் செலுத்த வேண்டும். நல்ல விஷயம் தான் அவர் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. இருந்தாலும் அவர் பந்து வீசும் போது பந்தை தான் உடலை விட்டு பின்னோக்கி எடுத்து செல்ல வேண்டும் அப்போது தான் அது பேட்ஸ்மேனை விக்கெட் இழப்புக்கு வழிவகுக்கும்.
அவருடைய முதல் குறிக்கோள் இந்திய அணிக்கு ஆட வேண்டும் என்பது தான். அதற்காக அவர் தன் உடற் தகுதி மீது கவனம் செலுத்த வேண்டும். தன் திறமைகளை வைத்து விளையாடும் போதே கிரிக்கெட் பற்றி புதிய நுட்பமான விஷயங்களை கற்று கொள்ள வேண்டும். இந்திய அணி நிர்வாகம் அவர் மேலும் புதிய திறமைகளை மேம்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in