குக்கு வித் கோமாளி பிரபலம் பவித்ரா லட்சுமி தனக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக தன்னுடைய முகம் சிதைந்து போன செய்தியை முதல் முறையாக வெளிகூறியுள்ளார். தற்போது அந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது.
இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக இருப்பவர் பவித்ரா லட்சுமி.
இவர் ஏற்கனவே சில குறும்படங்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து மாடலிங் , போட்டோஷூட் செய்து வருகிறார் பவித்ரா. என்ன தான் சில குறும்படங்களில் நடித்திருந்தாலும் மாடலாக இருந்தாலும் , இன்று அனைவருக்கும் தெரிந்த பிரபலமாக இருப்பதற்கு காரணம் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான்.
இது மட்டுமில்லாது குக்கு வித் கோமாளிக்கு பிறகு தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் வரிசைகட்டி நிற்கின்றன. காமெடி நடிகர் சதிஷ்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார் பவித்ரா. இந்நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தில் போட்ட “take me up” என்ற caption ஆல் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார் பவித்ரா.
இதை வைத்து மீம் கிரியேட்டர்கள் இவர் புகைப்படத்தை வைத்து வித விதமாக மீம்ஸ் போட்டு வருகின்றனர். இந்த மீம்களை கவனித்த பவித்ரா இது என்னுடைய அக்கவுண்ட் கெடயாது அது fake account என்று கூறியுள்ளார். பவித்ராவின் அக்கவுண்ட் என்று நினைத்து அவரது புகைப்படத்தை கலாய்த்து வரும் மீம் கிரியேட்டர்கள் தற்போது மூக்கு உடைந்து நிற்கின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in