தமிழ் திரையுலகின் ஜாம்பவானாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவரை தொடர்ந்து இவரது மகன் பிரபு சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தார். மக்களால் இளைய திலகம் என்று போற்ற பட்ட இவர் பல ரசிகர்களை வைத்திருந்தார். இவர் நடிப்பில் வெளிவந்த சின்னத்தம்பி திரைப்படம். இன்று வரை பேசப்பட்டு வருகிறது இந்த படத்தின் வெற்றி.
இந்நிலையில் பிரபு தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார் பிரபு. இந்நிலையில் தற்போது உடல் இடையை குறைத்து மீண்டும் இளம் பருவத்தில் பார்த்த பிரபுவை போல உருமாறி இருக்கிறார். அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதை தொடர்ந்து நடிகை குஷ்பூவும் அவரது உடல் இடையை திடீரென குறைத்து மீண்டும் 80ஸ் நடிகை போல மாறியுள்ளார். அவரது புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து இவர்கள் இருவரது புகைப்படங்களையும் வைத்து ரசிகர்கள் அனைவரும் சின்னத்தம்பி 2 படத்தை இயக்குங்கள் என்று சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in