விஜய் டிவி பிரபலமாக சின்னத்திரையில் கலக்கி வரும் நடிகர் பிரஜன். இவருக்கு சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு ரசிகர்கள் இருப்பது போலவே ரசிகர்கள் இருக்கின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி என்ற சீரியலின் மூலம் அதிகளவில் ரசிகர்களை பெற்றார் பிரஜன். இந்த சேரியலுக்காக விருதுகளும் பெற்றிருந்தார். இந்த சீரியலுக்கு பிறகு பிரஜன் சினிமாவில் கால் பதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவருக்கு ஏத்த சரியான கதைகள் அமையாத காரணத்தால் மீண்டும் சின்னத்திரைக்கே நடிக்க சென்று விட்டார் பிரஜன். அப்படி தான் இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இவரது மனைவி சாண்ட்ரா சின்னத்திரையில் மட்டுமல்லாது சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2019 இரண்டு அழகிய பெண் குழந்தைகள் பிறந்தது. அவர்களது இரட்டை பெண் குழந்தைக்கு ருத்ரா, மித்ரா என்று பெயரிட்டனர். இந்நிலையில் தற்போது இந்த குழந்திகளின் 2வது பிறந்தநாளை பிரஜன் மற்றும் சாண்ட்ரா ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக கொண்டாடி இருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
#Prajin #Sandra Daughter's Birthday Celebration…😍😍😍😍 pic.twitter.com/yErMaMMWql
— chettyrajubhai (@chettyrajubhai) April 1, 2021
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in