கோலிவுட்டில் ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத கதாநாயகனாக இருந்தவர் நடிகர் பிரஷாந்த். அந்த காலத்தில் பெண்கள் அனைவருக்கும் கனவுகண்ணனாக இருந்தவர் இவர். அப்போதெல்லாம் இயக்குனர்களும் லவ் ஸ்கிரிப்ட் என்றாலே பிரசாந்தை தான் தேர்வு செய்வார்கள். காதல் திரைப்படங்களாக தேர்வு செய்து நடித்து வந்த பிரசாந்திற்கு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஜீன்ஸ் திரைப்படம் பிக பெரிய வெற்றியை தேடி தந்தது. இப்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித், விஜய் ஆகியோரை விட அதிக மார்க்கெட் வைத்திருந்தார் பிரஷாந்த்.
பின்னர் காலத்தில் இவருக்கு பின் வந்த ஹீரோக்கள் ஆக்ஷன் ஸ்கிரிப்ட் தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கியபோதும் , அதே பழைய லவ் ஸ்கிரிப்ட்களையே தேர்ந்தெடுத்து நடித்து கொண்டிருந்ததால் இவரது மார்க்கெட் வீழ்ச்சியடைய துவங்கியது. அதன் பிறகு மற்ற நடிகர்களை போல் ஆக்ஷன் கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த பிரஷாந்த்திற்கு மிக பெரிய வெற்றி ஏதும் தேடி தரவில்லை. கடைசியாக இவர் நடித்து வெற்றி அடைந்த படம் வின்னர். அதன் பிறகு இவர் ஹீரோவாக நடித்த எந்த படங்களும் வெற்றி அடையவே இல்லை.
இவரது மார்க்கெட் மிக பெரிய வீழ்ச்சியடைந்து பாதாளத்திற்கு சென்று விட்டது. மிக மோசமான கதை தேர்வு, குண்டான தோற்றம் இவரை தமிழ் சினிமாவை விட்டே ஒதுக்கிவிட்டது என்று கூறலாம். இதை தான் சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்வது என்று கூறுவார். நீண்ட நாட்களுக்கு பிறகு ராமச்சரன் நடித்த விநாயக விதேய ராமா திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது பிரசாந்த் ஹிந்தியில் வெளியாகி வெற்றியடைந்த அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய சாக்லட் பாயாக உருமாறியுள்ளார் பிரஷாந்த். இந்த படத்தை முதலில் மோகன் ராஜா இயக்கப்போவதாக தகவல் வெளியானது.
அதன் பிறகு இந்த படத்தை பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பெடரிக் இயக்க போவதாக தகவல் வந்தது.தற்போது கடைசியாக இவர்கள் இவ்ரகள் இருவருமே கிடையாது , இந்த படத்தை இயக்க போகிறவர் பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தியாகராஜன் சமீபத்தில் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் , இவர் இயக்கத்தில் வெளிவந்து படம் வெற்றி பெற்று நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. தற்போது இவர்கள் இருவருமே ஒன்றாக இனைந்து கம்பாக் தருவதால் படத்தின் மேல் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in