இதுவரை எந்த ஒரு சமையல் நிகழ்ச்சியும் குழந்தைகள் வரை அனைவரையும் பார்க்கவைத்தது கிடையாது. அந்த வகையில் சிறியர் முதல் பெரியவர் வரை அனைவருமே ரசித்து பார்க்கும் நிகழ்ச்சியாக இருப்பது விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற குக்குகளுக்கும் சரி கோமாளிகளுக்கும் சரி ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்த கோமாளி புகழ் தான். இந்த நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக பல சேட்டைகள் செய்தாலும் உண்மையில் அவர் ஹீரோ தான்.இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த புகழுக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
முக்கியமாக தல அஜித்தின் படம் வலிமை , சிவகார்த்திகேயனின் படம் டான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது vijay television awards புகழுக்கு best entertainer விருதை கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சி இன்னும் ஒளிபரப்பாகவில்லை என்றாலும் விருது பெற்ற புகழ் தன்னுடைய instagram பக்கத்தில் தனது சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார். இதற்கு விஜய் டிவி பிரபலங்கள் அனைவரும் புகழுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து சிம்புவின் மாநாடு படப்பிடிப்பில் புகழ் கலந்து கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மாநாடு படத்தில் புகழ் நடிக்கிறாரா என்ற அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளிவராத காரணத்தால் ரசிகர்கள் இந்த சந்திப்பு எதற்காக என்ற இருக்கின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in