இந்திய மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி சற்று தடுமாறியே தங்களை நிலைநாட்டியது. இதற்கு காரணம் பண்ட் மற்றும் புஜாரா.
ஆம், 257 ரன்கள் எடுத்து 6 விக்கெட் இழப்புக்கு ஆளான இந்திய அணி இன்னும் 321 ரன்கள் பின்தங்கி உள்ளது. இந்த நிலையில் புஜாரா மற்றும் பண்ட் மட்டுமே நின்று அணியை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தனர். புஜாரா 73 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் அவர் எதிர்பாரா விதமாக ஆட்டம் இழந்தார். அவர் விக்கெட் இழப்புக்கு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
தன்னுடைய ஆட்டத்தை மிக சிறப்பாக கொண்டு போன புஜாரா டாம் பெஸ் வீசிய பந்தை டீப் ஸ்கொயர் லெக் சைடில் அடித்து விளையாடி இருந்தார். ஆனால், ஸார்ட் ஸ்கொயர் லெக் திசையில் ஃபீல்டிங் நின்ற வீரரின் ஹெல்மெட்டில் பட்ட பந்து, வேகமாக இன்னொரு திசையில் பறந்தது. இந்த பந்தை மிட் ஆன் திசையில் பறந்து வீரர் கேட்ச் பிடித்தார்.
அவர் அடித்த ஷார்ட் எங்கேயோ செல்ல, ஹெல்மெட்டில் பட்டு வேறு திசை சென்று விக்கெட் இழந்ததால் புஜாரா ஆத்திரம் அடைந்தார். இதனால் அவர் பேட்டை வேகமாக தரையில் அடித்து விட்டு மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in