தமிழகத்தில் அண்ணியார் என்ற ஒற்றை வார்த்தை மூலம் பிரபலமானவர் தான் ரேகா கிருஷ்ணப்பா! தெய்வமகள் சீரியலை வாணி போஜனுக்காக பார்க்கும் காலம் சென்று அண்ணியாருக்காக பார்க்கும் கூட்டம் உருவாகியது. அத்தனை சிறப்பு மிக்கவர் இந்த அண்ணியார்.
WWE-ல் Undertaker-க்கு ஏழு உயிர் உள்ளதாக கதை கட்டி 90ஸ் கிட்ஸ் ஒரு காலத்தில் நம்பி மலைத்து கொண்டிருந்தனர். ஆனால் நிஜ வாழ்கையிலும் அப்படி ஒரு நபராக தான் இவர் பார்க்கப்பட்டார்! எத்தனை முறை கொன்றாலும் எப்படியாவது பழி தீர்ப்பேன் என திரும்ப திரும்ப வந்து பிரச்சனை கொடுப்பதில் இவருக்கு இணை இவரே. இதனால் தான் இன்றும் இவரை மீம்ஸ் மூலம் கிண்டலடித்து கொண்டாடி வருகின்றனர் வலைதள வாசிகள்.
தெய்வமகள் தொடர் முடிந்த பின் இவரையே அனைவரும் மிஸ் செய்ய போவதாக கருத்துக்கள் எழுந்தது. அனால் இவர் நந்தினி தொடரில் சாமியாராக வளம் வந்து இவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.பின்பு பெரிதாக சீரியலில் நடிக்காமல் இருப்பதாக செய்திகள் வந்தது. மேலும்,வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குவிந்ததாகவும் சொல்லப்பட்டது.
தற்பொழுது அந்நியரின் ரசிகர்களுக்கு சூப்பர் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த சீரியலின் கதாநாயகனாக 11 வருடங்களுக்கு முன் ஒளிபரப்பப்பட்ட “தென்றல்” தொடர் தீபக் நடிக்கவுள்ளதாகவும் கதாநாயகியாக ஸ்ருதி நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர்கள் இணைந்து நடிக்கும் சீரியலின் பெயர் “தமிழும் சரஸ்வதியும்” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in