2021 ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் நடைபெற போகிறது. போன வருடம் நடந்த ஐ.பி.எல் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லாதது போல இந்த வருடத்திலும் சில போட்டிகளுக்கு ரசிகர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது என்று பல கட்டுப்பாடுகளுடனே நடக்க இருக்கிறது. ஐ.பி.எல் யில் அதிக ரசிகர்களை கொண்ட அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். தல தோனி இந்த அணியில் இருப்பதாலேயே இந்த அணிக்கு ஏராளமான ரசிகர்கள் உலகமெங்கும் உள்ளானர். மூன்று முறை ஐ.பி.எல் தொடரை கைப்பற்றி இருக்கும் இந்த அணி கடந்த 2020 ஐ.பி.எல் தொடரில் சரியாக பெர்பார்ம் செய்யவில்லை.
அதனை சரி செய்யும் விதமாக தற்போது பிப்ரவரி மாதத்தில் நடந்த ஏலத்தில் ராபின் உத்தப்பாவை எடுத்துள்ளது சென்னை அணி. ஒரு காலத்தில் சர்வதேச இந்திய கிரிக்கெட் வீரரான உத்தப்பா பேட்டிங்கில் நல்ல பார்மில் இருந்தார். இந்திய அணியின் மிக சிறந்த அதிரடி ஆட்டக்காரராகவும் இருந்தார். காலப்போக்கில் இவரது ஆட்டம் வலு இழந்தது என்றே கூறலாம். ஐ.பி.எல் ல் கொல்கத்தா அணி ராஜஸ்தான் அணி என இரண்டு அணிகளில் இருந்த உத்தப்பா தற்போது சென்னை அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்க்கிரார். இந்த முறை இவர் எப்படி விளையாடப்போகிறார் என்பது நடக்கப்போகும் ஐ.பி.எல் தொடரில் தெரியவரும். இந்நிலையில் உத்தப்பா தன குழந்தையுடன் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
https://twitter.com/ChennaiIPL/status/1374307215054565383
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in