இந்திய அணியின் மிக சிறந்த துவக்க ஆட்டக்காரர் என்றால் அது ரோஹித் சர்மா தான். தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்தியா ஒரு நாள் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்தியா இங்கிலாந்தை டெஸ்ட் மற்றும் டி 20 ஆகிய இரண்டு தொடர்களிலும் வீழ்த்தி விட்டது. இந்நிலையில் ஒருநாள் போட்டியில் நிச்சயம் ஜெய்த்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது இங்கிலாந்து அணி. இருந்தாலும் ஒரு நாள் தொடரின் முதல் போட்டியிலேயே இந்தியாவிடம் மண்ணை கவ்வியது இங்கிலாந்து அணி. இனி வரும் ஆட்டங்களில் 2 ஆட்டங்களில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும்.
ரோஹித் சர்மா தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு நாள் தொடரில் சரியாக பெர்பார்ம் செய்யவில்லை என்றாலும் இந்திய அணி க்கே தெரியும் அவர் ஒரு சிறந்த ஆட்டக்காரர் என்று. இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது செய்தியாளர் ரோஹித்தின் பெயரை தவறுதலாக விராட் என்று கூறி விட்டார். அதை சரியாக ரோஹித் சர்மா கவனிக்கவில்லை என்றாலும் சிறிது நேரம் களைத்து அதை புரிந்துக் கொண்டார். அப்போது அவர் மாட்டிக் கொண்டிருந்த கேப்பை கழட்டி நான் கோலி கிடையாது ரோஹித் என்று குழப்பத்தில் இருந்த செய்தியாளரை கிண்டல் செய்யும் விதமாக செய்துள்ளார் ரோஹித். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
https://twitter.com/Adarshdvn45/status/1375350962299146243
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in