இந்திய திரைத்துறையில் புது அத்தியாயம் படைத்த படம்தான் பாகுபலி. மிகப்பிரம்மாண்டமாய் இருந்த அந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் ராஜமௌலி. பாகுபலி 1 வெற்றிக்குப் பின் அவர் பாகுபலி 2 என்ற படத்தை எடுத்தார். சமீபத்தில் ஒரு பேட்டியின் போது பாகுபலி படத்தின் கதாநாயகனான பிரபாஸ், பாகுபலி 3 படம் எடுக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்து இருந்தார். தற்போது ராஜமௌலி அவர்கள் இயக்கித்தில் RRR என்னும் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ராம் சரண், ஜீனியர் என்.டி. ஆர் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படம் குறித்து ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக இந்த படத்தில் தனது கடின உழைப்பை கலைஞர்கள் அனைவரும் கொடுத்துள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும். தயாரிப்பு, கலை, வடிவம், கிராபிக்ஸ் காட்சிகள் என பார்க்கும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது படக்குழு. குறிப்பாக சொல்ல வேண்டுமானல் புலிவேட்டைக் காட்சி மற்றும் பாலத்தில் ரயில் பற்றி எரியும் காட்சிகள் போன்றவை கிராபிக்ஸில் பின்னி எடுத்துள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். 1920 காலப்பகுதியில் ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியா காட்டியுள்ளார் இயக்குனர். ஆனால் படத்தின் கதையில் சில சுணக்கங்களும் காணப்படுகிறது. பாகுபலி போல் RRR கற்பனை கதையில்லை. வரலாறு கதை. ஆனால் ராம்சரண் ஆங்கிலேயர்களை கடவுள் ராமர் போன்று வில் அம்பு கொண்டு வீழ்த்துவது போன்ற காட்சிகள் அறிவுக்கு எட்டாதவையாக இருக்கின்றன. YouTube video code embed credits: Tamilglitz
பாகுபலி போன்ற கற்பனை குதிரைகளை கட்டவிழ்த்து விடும் படங்கள் என்றால் இந்த பிரச்சினைகள் இல்லை. ஆனால் இந்திய சுதந்திர போராட்டத்தை மையக் கருவாக கொண்டு உருவாக்கப்படும் படங்களில் ஆயுதம் தாங்க ஆங்கிலேயர்களை வில் அம்பு கொண்டு வீழ்த்தும் கற்பனைகள் எல்லாம் கொஞ்சம் ஓவர் என்ற கமெண்டுகளும் வந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் கதை நகரும் விதம், சொல்ல வந்த கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும் பொழுது ரசிகர்களை படம் பெரிதளவில் கவர்ந்து உள்ளது என்றே சொல்லலாம். முதல் காட்சிகளை முடித்துவிட்டு ரசிகர்கள் கொடுத்த விமர்சனங்களை நீங்களே பாருங்கள்.. Watch the below video…
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in