தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கு favourite ஹீரோயின் ஆக இருப்பவர் நடிகை சமந்தா. அமைதியான தோற்றத்தாலும், எதார்த்தமான நடிப்பாலும் தமிழ் , தெலுங்கு சினிமா துறையில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜூனா குடும்பத்தின் மருமகளான பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களையும் தாண்டி தற்போது வெப் சீரிஸில் கொடுத்துள்ளார் சமந்தா.
அந்த வகையில் இவர் நடித்த பேமிலி மேன் 2 என்ற வெப் சீரிஸ் சமீபத்தில் வெளியானது . இதில் மனோஜ் பாஜ்பாய் கதாநாயகனாக நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரியாமணி நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸில் ஈழ தமிழ் பெண்ணாக சமந்தா நடித்தார். இதை தொடர்ந்து சமந்தாவை பாராட்டுபவர்கள் ஒரு பக்கம் இருக்க , சில காட்சிகளால் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார் சமந்தா.
இந்த சர்ச்சைகளுக்கு நடுவில் இந்த வெப் சீரிஸ் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார் சமந்தா. அதில் , மக்கள் எனக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி. இதில் வரும் ராஜி என்ற கதாபாத்திரம் என்றும் எனக்கு ஸ்பெஷல் தான். இந்த வெப் சீரிஸில் என்னை நடிக்க வைக்க படக்குழுவினர் அணுகியபோது , ஈழத்தமிழர்களை பற்றிய ஆவணப்படத்தை காட்டினார்கள். அதில் அவர்கள் பட்ட கஷ்டங்களை நான் உணர்ந்தேன்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்ததை இந்த உலகம் பெரிதாக பார்க்கவில்லை. அங்கு நடந்த போரின் காரணமாக பலர் வீடுகளை இழந்து வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக தான் இந்த கதாபாத்திரத்தில் நடித்தேன். இதை போரில் உயிரிழந்தவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த ராஜி கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டவையாக இருந்தாலும் , நினைவூட்டலாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in