சூர்யாவுடன் இணையும் “சிறுத்தை” சிவா! அப்டேட் கொடுத்து அலற விட்ட இயக்குனர்! Siruthai Siva Latest Interview About Surya

குடும்ப ரசிகர்களை கவர்வதில் கைதேர்ந்தவர் இயக்குனர் சிவா என்றால் அது மிகையாகாது! எந்த வித கவர்ச்சி காட்சிகளை நம்பி படம் எடுக்காமல் முழுக்க முழுக்க குடும்ப ரசிகர்களை நம்பி திரைப்படத்தை எடுத்து மக்களுக்கு வழங்குவதை தொடர்ந்து செய்து வருபவர் தான் இயக்குனர் சிவா! சிறுத்தை சிவா என்று இவரை அழைக்க காரணமே இவர் நடிகர் கார்த்தி சிவகுமாரை வைத்து எடுத்த சிறுத்தை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதே என்பதும் அனைவரும் அறிந்ததே!

சூர்யாவுடன் இணையும் "சிறுத்தை" சிவா! அப்டேட் கொடுத்து அலற விட்ட இயக்குனர்! Siruthai Siva Latest Interview About Surya 1

விளம்பரம்

இதை தொடர்ந்து தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் படம் எடுத்துள்ளார். சிறுத்தை படத்தின் இமாலய வெற்றியால் தல அஜித் குமார் அவர்களை வைத்து படம் இயக்கம் பொன்னான வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது! வீரம் என்ற படத்தின் மூலம் குடும்ப ரசிகர்களும் தல அஜித்தை தூக்கி வைத்து கொண்டாடும் வண்ணம் இவரது படைப்பு அமைந்துள்ளது!

சூர்யாவுடன் இணையும் "சிறுத்தை" சிவா! அப்டேட் கொடுத்து அலற விட்ட இயக்குனர்! Siruthai Siva Latest Interview About Surya 2

விளம்பரம்

அதை தொடர்ந்து வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து தல அஜித் மற்றும் – சிறுத்தை சிவா அவர்களின் வெற்றி கூட்டணி தொடர்ந்து அந்த வெற்றியின் தாக்கம் சூப்பர்ஸ்டார் வரை சென்றதன் விளைவே குடும்பங்கள் கொண்டாடும் படமான அண்ணாத்தே என்பதும் சினிமா ரசிகர்கள் அனைவரும் அறிந்த ஒரு செய்தி! இந்நிலையில் சமீபத்தில் சிறுத்தை சிவா அவர்கள் ஒரு பேட்டியில், ஜெய் பீம் பட நாயகன் சூர்யாவுடன் இணைந்து அடுத்து படம் செய்யப்போவதாக கூறியுள்ளார்! குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என கூறியுள்ளார்! அந்த விடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below!…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment