சுல்தான் படத்தின் யாரையும் இவளோ அழகா பாக்கல வீடியோ பாடல்!

தமிழ் சினிமாவில் தன் எதார்த்த நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் நெஞ்சங்களையும் கவர்ந்திழுத்தவர் நடிகர் கார்த்தி. இவர் நடித்துள்ள அணைத்து படங்களுமே வெவேறு இயக்குனர்களில் இயக்கப்பட்டது தான். எந்த ஒரு இயக்குனருடனும் இரண்டாவதாக கூட்டணி சேராத ஒரே நடிகர் கார்த்தி தான். இவர் தேர்தெடுத்து நடித்த அத்தனை கதைகளுமே வித்தியாசமான கதையம்சத்துடன் இருக்கும். இவரது இயல்பான நடிப்பை பார்த்து வியக்காத ஆட்களே இருக்க முடியாது. இந்நிலையில் தற்போது கார்த்தி, பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படத்தில் ராஷ்மிகா மந்தண்ணா இவருக்கு கதாநாயகியாக நடித்துள்ளார்.

சுல்தான் படத்தின் யாரையும் இவளோ அழகா பாக்கல வீடியோ பாடல்! 1

விளம்பரம்

இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதி இந்த படம் ரிலீசாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.அதிலும் விவேக் மேர்வின் இசையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஜெய் சுல்தான் என்ற பாடல் வைரலாக பரவியது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் ஏப்ரல் 2 தேதி அன்று திரைக்கு வந்து வெற்றி படமாக அமைந்திருக்கிறது. இதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் யாரையும் இவ்ளோ அழகா என்ற பாடலின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார்.

Yaaraiyum Ivlo Azhaga - Video | Sulthan | Karthi, Rashmika | Silambarasan TR | Vivek - Mervin | 4K

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment