தமிழ் சினிமாவில் எளிதாக உள்ளே நுழைந்தாலும் நல்ல நிலைக்கு வந்து அதை தக்கவைத்து கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல. அப்படி எளிதாக சினிமாவிற்குள் வந்த பல நடிகர்கள் தோற்றுப்போய் இருக்கிறார்கள். ஆனால் பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்றால் அது தளபதி விஜய் தான்.
பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். இவர் இறுதியாக நடித்து வெளி வந்த படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். மாஸ்டரின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்துவருகிறார் விஜய். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் படம் பிடிக்கப்பட்டது.
சமீபத்தில் தளபதி ஜார்ஜியாவிற்கு விமானத்தில் செல்லும் விடியோவும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. கொரோனா பரவளின் காரணமாக தற்காலிகமாக தளபதி 65 ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜார்ஜியாவில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது அங்குள்ள தளபதி ரசிகர்கள் விஜயை சுற்றி நின்று ஆட்டோகிராப் வாங்கும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
https://twitter.com/AbiShamla/status/1398580412822310917
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in