தற்போதைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் விஜய் சமீபத்தில் நடித்து வெளிவந்த படம் தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவந்த இந்த படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்கில் வெளியானது. கொரோனா பாதிப்பால் வெறும் 50 சதவீத இருக்கையில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை செய்து அசத்தியது. ஓ.டி.டி யில் வெளியான பிறகும் திரையரங்கில் கூட்டம் குறையாமல் வசூலை குவித்தது மாஸ்டர் திரைப்படம்.
இந்த படத்தை விஜயின் நடிப்பிற்காக மட்டுமல்ல விஜய் சேதுபதியின் மிரட்டலான நடிப்பிற்காகவும் மக்கள் இந்த படத்தை திரையரங்கில் விரும்பி பார்த்தனர். ஹீரோவிற்கு ஏற்ற அளவில் வில்லன் பவானி கதாபாத்திரமும் பெரிதளவில் பேசப்பட்டது. தற்போது தளபதி விஜய் லோகேஷ் கனகராஜுடன் இனைந்து பிரம்மாண்ட வெற்றியை அடுத்து தற்போது மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுப்பதற்கு நெல்சன் திலீப்குமாருடன் இணைந்துள்ளார். நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.
நெல்சனின் அடுத்த படைப்பான டாக்டர் திரைப்படம் திரைக்கு வெளியாக போவதை ஒட்டி , தற்போது விஜயை வைத்து தளபதி 65 இயக்க உள்ளார். படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்க இருக்கும் நிலையில் விஜயின் அடுத்த படம் பற்றிய பேச்சு அடிபட்டு கொண்டிருக்கின்றது. தளபதி 65 படம் அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பை முடிவடைந்து அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு விஜய் தளபதி 66 படத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இறுதிச்சுற்று , சூரரை போற்று ஆகிய வெற்றி படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதன் பிறகு விஜய் நடிக்க இருக்கும் தளபதி 67 படத்தை தடம் , தடையற தாக்க போன்ற வெற்றி படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்க இருக்கிறன் என்ற தகவல் கசிந்துள்ளது. அதிகார பூர்வ தகவல் வரும் வரை காத்திருந்து தான் ஆக வேண்டும்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in