அதிரடி காட்டும் வலிமை ப்ரோமோ ..Valimai Promo 2 | Ajith Kumar | Yuvan Shankar Raja | H Vinoth | 24 Feb

தமிழ் சினிமாவின் முன்னணி கதா நாயகர்களில் ஒருவர்தான் அஜித் குமார். இவரை அவரது ரசிகர்கள் செல்லமாக தல என்று அழைப்பது உண்டு. தற்போது அஜித் குமார் எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் “வலிமை”! என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி புகழும் நடித்துள்ளார். மேலும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். போன வருடமே இந்த திரைப்படம் திரையில் வெளியாகும் என்று எண்ணி கொண்டிருந்த நிலையில் கொரோனா பரவலின் காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங்கில் தாமதம் ஏற்பட்டது. சமீபத்தில் தான் இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது. தல ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்தும் விதமாக இந்த படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளன. Watch the video below

அதிரடி காட்டும் வலிமை ப்ரோமோ ..Valimai Promo 2 | Ajith Kumar | Yuvan Shankar Raja | H Vinoth | 24 Feb 1

விளம்பரம்

தயாரிப்பாளர் போனி கபூர் சில மாதங்களுக்கு முன்பு அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டிருந்தார். வலிமை திரைப்படம் வரும் ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற தகவலை பகிர்ந்தார். ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை பொங்கலுக்கு படம் வெளியாகவில்லை மேலும் அது தள்ளிப்போனது. அதோடு வெளியான வலிமை படத்தின் Glipmse, டீஸர், டிரைலர் என இதுவரை வெளியான அனைத்துமே அதிக லைக்குகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது. தற்போது இந்த படம் பிப்ரவரி மாதம் 24ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. Watch the video below..

அதிரடி காட்டும் வலிமை ப்ரோமோ ..Valimai Promo 2 | Ajith Kumar | Yuvan Shankar Raja | H Vinoth | 24 Feb 2

விளம்பரம்

ரசிகர்கள் அனைவரும் படம் வெளியாவதை எதிர்பார்த்து ஆவலாக உள்ள நிலையில் போனி கபூர் ட்விட்டரில் நேற்று புது வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார். அதில் அவர் இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது என்ற வீடியோவை பகிர்ந்து இருந்தார். தற்போது வலிமை படத்தின் இரண்டாவது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the video below…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment