Valimai Official Motion Poster Video | Thala Ajith | Yuvan

Watch Valimai Motion Poster Video Below –அஜித் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர். அல்டிமேட் ஸ்டாராக இருக்கும் அஜித் “தல” என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். அஜித் கடைசியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார் . இப்படம் 2019ல் வெளியானது. அதை தொடர்ந்து தற்போது வலிமை எனும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். வலிமை படத்தை வினோத் இயக்குகிறார் போனி கபூர் தயாரிக்கிறார் யுவன் ஷன்கர் ராஜா இசையமைக்கிறார். ரசிகர்கள் நீண்ட நாட்களாக வலிமை படத்தின் அப்டேட்டை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
வெகுநாளாக காத்திருந்த ரசிகர்களுக்கு இனிய செய்தி கிடைத்துள்ளது என்றே கூறலாம். சமீபத்தில் நடிகர் விஜய்யின் பிறந்த நாளன்று அவர் நடிக்கும் படமான பீஸ்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் அப்டேட் வெளியிடப்பட்டது. விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதனால், தல ரசிகர்கள் தங்களுக்கு வலிமை படத்தின் அப்டேட் வராதா என ஏங்கிக் கொண்டிருந்தனர். இதனை உணர்ந்த படத்தின் இயக்குனர் வினோத் ரசிகர்களுக்கு ஜூலை மாதம் முதல் அப்டேட் வரபோவதாக தெரிவித்திருந்தார். Watch Valimai Motion Poster Video Below 

படத்தின் பெரும்பாலும் பங்கு படப்பிடிப்பு வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் முடிவடைந்தது. கடந்த வருடமே முடிய வேண்டிய படப்பிடிப்பு கொரோனா காரணமாக தாமதமாகியுள்ளது என்று படத்தின் இயக்குனர் வினோத் கூறியுள்ளார். மேலும் இன்னும் 10 நாட்கள் கொண்ட படப்பிடிப்பு தற்போது எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து வலிமை அப்டேட் காக ஏங்கிக் கொண்டிருந்த தல ரசிகர்கள் செல்லும் இடமெல்லாம் வலிமை அப்டேட் கேட்டனர். பூசாரியிடம் ஆரம்பித்து football matchல் கூட வலிமை அப்டேட் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது வரை எந்த ஒரு படத்திற்கும் இல்லாத அளவிற்கு book my show appல் அதிக விருப்பமுள்ள படம் என்ற சாதனை படைத்தது வலிமை. இப்படி ரசிகர்கள் ஏக்கத்தில் மூழ்கி கிடக்க தற்போது அந்த காத்திருப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து வலிமை அப்டேட்டை கொடுத்துள்ளது படக்குழு. இதை கேட்ட தல ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருக்கின்றனர். Video Embed Credits – Bay view Projects LLP Youtube Channel

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment