5 வயதிலிருந்து 50 வயது வரை அனைவரையும் நடனமாட வைக்கும் குத்துப் பாடல் என்றால் அது மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் தான். இன்று வரை பல மக்களின் பிளே லிஸ்டில் இருக்கும் இந்த பாடல் அனிருத் இசையமைப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ளது. விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பில் வெளி வந்த மாஸ்டர் திரைப்படம் எரிதிர்பார்காத அளவுக்கு வசூலை குவித்தது. கொரோன பாதிப்பின் காரணத்தால் படம் வெளியாக ஒரு வருடம் தாமதமானாலும் இந்த பாடல் முன்னதாகவே வெளியாகி அனைவரையும் கவர்ந்திழுத்தது.
இது வரை தமிழ் சினிமாவில் எந்த பாடலும் இதனளவுக்கு ட்ரெண்ட் ஆனது கிடையாது. ஒரு வருடம் கடந்தும் இன்றும் பலர் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். சினிமா பிரபலங்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை அனைவரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவிட்டுள்ளனர். மேலும் உலகமெங்கும் உள்ள பல கோடி மக்கள் இந்த பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ல் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது ஒரு திருமண விழாவில் ஒரு பெண் குழந்தை இந்த பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த குட்டி பொண்ணோடு சேர்ந்து மற்றும் சிலர் இந்த பாடலுக்கு நடனமாடி உள்ளனர்.
https://twitter.com/RSuryaPrakash15/status/1371832387731066886
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in