உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வந்த விஜயை சுற்றி பல சர்ச்சைகள் நிகழ்ந்து வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இன்று இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆழ்ந்து உள்ளனர். என்றுமே தளபதி விஜய் அவ்வாறு செய்ய மாட்டார் என்று மார் தட்டி மீம்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர்.இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக சிவப்பு நிற மாருதி சுசுகி செலிரியோ என்ற காரில் வந்தார். இந்த காரின் நம்பர் ப்ளேட்டைப் பார்த்த நெட்டிசன்கள் அதை இணையத்தில் போட்டு பார்த்து அந்த காருக்கு இன்சூரன்ஸ் செலுத்தவில்லை என்று ஆதாரத்துடன் போட்டு கலாய்த்து எடுத்துவிட்டனர். தற்போது வெளியாகியுள்ள செய்தியில் அவருடைய இன்சூரன்ஸ் மே 2022 வரை செல்லும் என்ற தகவல் ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவரை இவரது ரசிகர்கள் இளைய தளபதி என்று செல்லமாக அழைப்பது உண்டு. இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் மகனாக எளிமையாக திரைத்துறையில் நுழைந்து விட்டார் என்ற விமர்சனங்கள் ஆரம்பத்தில் இவர் மீது வைக்கப்பட்டாலும், தனது அயராத உழைப்பு மற்றும் நல்ல படங்களை கொடுத்த காரணத்தால் இவர் இன்று உயர்ந்த இடத்தை அடைந்துள்ளார் என்று சொன்னால் அது மிகையில்லை. இவரது படம் எப்போது வெளியாகும் என்று பல கோடி ரசிகர்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர், அந்த அளவிற்கு மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் விஜய். Twitter Original Source from: RIAZ K AHMED
For the past few days, a news stating that #ThalapathyVijay's car insurance is still due has been doing the rounds on social media. Here is a copy of the insurance, in which it is clearly stated that the insurance is valid till May 28, 2022! pic.twitter.com/d9tfYuIaEM
— RIAZ K AHMED (@RIAZtheboss) February 21, 2022
தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் Beast படத்தில் நடித்துவருகிறார் விஜய். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தாயாருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் வெளியான அரபிக் குத்து பாடல் பல லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து உள்ளது. விஜய் எப்பொழுதும் தனது படங்களில் சில இடங்களில் அரசியல் பேசுவது உண்டு. கத்தி படத்தில் 2ஜி அலைக்கற்றை பற்றி அவர் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதே போல் தலைவா படத்தில் அரசியல் உள்ளது என்று சொல்லி அந்த படம் வெளிவருவதற்கு முன்பே பல சிக்கல்களை சந்தித்தார் விஜய்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in