தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி யார் என்று கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும் தளபதி விஜய் என்று. திரையுலகில் மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டு கொடி கட்டி பார்ப்பவர் விஜய். இவருக்கு இணை இவர் மட்டுமே என்பதற்கு உதாரணமாக இவர் முன்னாள் நடித்து வசூல் செய்த படத்தின் சாதனைகளை இவரே முறியடித்து காட்டுவதில் இவர் வல்லவர். அந்தளவிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திளுக்கக் கூடிய காந்தசக்தி இவரிடம் உண்டு.
விஜயின் படங்களை இயக்க இயக்குனர்கள் போட்டிபோட்டு கொள்வதும் இவரது படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முட்டிக்கொள்வதும் இயல்பான ஒன்று. சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மிகபெரிய வசூல் சாதனையை படைத்தது. ஓ.டி.டி யில் படம் வெளியான பிறகும் திரையரங்குளில் இவரை ரசிக்க ரசிகர்கள் ஆர்வம் கட்டி வந்தனர். திரையரங்குகள் மூடப்பட்டு பல மாதங்கள் களித்து, வெறும் 50 சதவீத இருக்கையில் வெளியான படம் இந்தளவிற்கு வசூல் சாதனை படைப்பது திரைத்துறையில் இதுவே முதல் முறை.
தற்போது விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் ரஷ்யாவில் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தளபதி 66 படத்தை தயாரிப்பதற்கு 5 பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிபோட்டு கொண்டிருக்கின்றனர். இதன் முதல் வரிசையில் உள்ளது தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனர் முரளி ராமசாமி. ஏற்கனவே இவர்களின் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் மெர்சல். மெர்சல் படத்தின் திட்டமிடாத காட்சிகளை திடீரென அட்லீ காட்சியாக்கியதால் கிட்டத்தட்ட 60 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அதை சரிக்கட்டும் வகையில் தளபதி 66 படம் தனக்கு வேண்டும் என்று விஜயிடம் கேட்டு வருகிறார் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனர். அதனோடு மாஸ்டர் படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார் தளபதி 66 படத்தின் வாய்ப்பு தனக்கு வேண்டும் என்று கேட்டு வருகிறார். இவர்களின் வரிசையில் ஏஜிஎஸ் நிறுவனம் , லைக்கா நிறுவனம் என 5 பெரும் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் தளபதி 66 படத்திற்காக போட்டிபோட்டு கொண்டு இருக்கின்றனர். இதன் மூலம் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது, தளபதி விஜயின் மார்க்கெட் தற்போதுள்ள எந்த நடிகருக்கும் இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in