அர்ப்பணிப்பு என்ற வார்த்தைக்கே எடுத்துக்காட்டாய் விளங்கும் ஒரே நடிகர் சியான் விக்ரம் தான். சினிமாவிற்க்காகவே தன்னை அர்ப்பணித்து தன்னுடைய கடின உழைப்பினால் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்திருக்கும் நடிகர் விக்ரம். சமீபத்தில் தான் இவரது மகம் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். 7 வேடங்களில் தன்னுடைய அசத்தலான நடிப்பாற்றல் கொண்டு கோப்ரா திரைப்படத்தில் நடித்து முடித்த விக்ரம் தற்போது கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் சியான் 60 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதில் விக்ரம் வில்லனாகவும் துருவ் விக்ரம் ஹீரோவாகவும் நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளியானது. துருவ் விக்ரமிற்கு ஜோடியாக வாணி போஜனும் விக்ரமிற்கு ஜோடியாக சிம்ரனும் நடிக்க உள்ளனர். சிம்ரனின் திரைப்பயணத்தில் முதல் முறையாக விக்ரமுடன் ஜோடியாக படம் இது தான். ஏற்கனவே பாலா இயக்கத்தில் வெளிவந்த பிதாமகன் திரைப்படத்தில் விக்ரம் மற்றும் சூர்யாவுடன் இனைந்து சிறிய கதாபாத்திரத்தில் சிம்ரன் நடித்திருந்தாலும் விக்ரமுடன் ஜோடியாக நடிக்கும் முதல் படம் சியான் 60 தான்.
இந்த படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த 7 screen studio நிறுவனம் தயாரிக்கிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் தான் இசையமைக்க போகிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால் தற்போது அனிருத் பதிலாக கார்த்திக் சுப்ராஜின் ஜகமே தந்திரம் படத்திற்கு இசையமைத்து கொடுத்த சந்தோஷ் நாராயணன் தான் இந்த படத்திற்கும் இசையமைக்க போகிறார் என்று தற்போது அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. ஏன் இந்த மாற்றம், அனிருத் ஏன் திடீரென விலகிவிட்டார் என்று சினிமா வட்டாரத்தில் சற்று சலசலப்பு எழுந்துள்ளது.
கார்த்திக் சுப்ராஜ் இயக்கி வெளிவந்த பெரும்பாலும் படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்து வந்துள்ளார். கார்த்திக் சுப்ராஜுடன் சந்தோஷ் நாராயணன் கைகோர்த்த அனைத்து படங்களின் பாடல்களுமே வெற்றி அடைந்தது. இடையில் பேட்ட படத்திற்கு மட்டுமே அனிருத் இசையமைத்து மாஸ் காட்டினார். அனிருத் நிறைய படந்திகளுக்கு கமிட் ஆகி உள்ளதால் இதிலிருந்து விலகி இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in