தந்தை போல் மகன் இருப்பது கிடையாது என்று கேள்விப்பட்டிருப்போம். ஆமாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்திறமைகள் ஒளிந்திருக்கின்றது. ஆனால் இங்கு தன் அப்பா மற்றும் தாத்தா அடைந்த வெற்றியை மகன் நெருங்ககூட முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. எளிதாக சினிமாவிற்குள் நுழைந்திருந்தாலும் ஒரு வெற்றி இடத்தை தக்க வைத்து கொள்வது என்பது சாதாரண காரியம் இல்லை. இன்றும் தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் என்று அழைக்கப்படுபவர் சிவாஜிகணேசன் அவர்கள்.
அவர்களது மகன் பிரபு வும் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பரந்த நடிகர் தான். ஆனால் அவருடைய வாரிசான விக்ரம் பிரபு சினிமாவிற்குள் எளிதாக நுழைந்திருந்தாலும் அவரால் வெற்றி இடத்தை தக்க வைத்து கொள்ள முடியவில்லை. இவர் அறிமுகமான காலத்தில் கும்கி , இவன் தந்திரன் போன்ற வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் காலப்போக்கில் சரியான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிக்க தவறியதால் அவரால் மக்கள் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை. அடுத்தடுத்து தொடர் தோல்வி படங்களை கொடுத்ததால் மக்கள் இவரை மறந்துவிட்டனர்.
இறுதியாக இவர் நடித்த புலிக்குத்தி பாண்டி இவர் நடித்த மற்றப் படங்களோடு ஒப்பிடும்போது வெற்றி படம் என்றே கூறலாம். ஆனால் அதுவும் திரைக்கு வராமல் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியான காரணத்தினால் மக்களிடையே மிக பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் தற்போது விக்ரம் பிரபு டாணாக்காரன் என்ற திரைப்படத்தில் போலீசாக நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
போலீஸ் என்றாலே மீசை வைத்திருந்தால் தான் கம்பீரமாக இருக்கும், ஆனால் இவர் இந்த போஸ்டரில் மீசையில்லாமல் கம்பீரமாக காட்சியளிக்கிறார். விக்ரம்பிரபு இந்த முறையாவது ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் வெற்றி படத்தை கொடுப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு மக்கள் மனதில் எழுந்துள்ளது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in